மத்திய அரசின் சகல வசதிகளை உள்ளடக்கிய ஏய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் 200 ஏக்கரில் அமையுள்ளதாக கூறப்பட்டுவந்தது.இதுகுறித்து அதிமுக அமைச்சர்களும்,பாஜக கட்சியினரும் மார்தட்டி வந்தனர்.இந்தியா முழுவதும் 14 இடங்களில் இம்மருத்துவமனைகள் அமையுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.மதுரையில் உள்ள இடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டது. இதற்கே பல மாதங்கள் ஆனது. இந்த மருத்துவனைக்கு தமிழக அரசு சார்பாக மின்சாரம், தண்ணீர் வசதி, பேருந்து வசதி ஆகியவை அளிக்கப்பட வேண்டும். இதற்காக இன்னும் சில விதிமுறைகளை மத்திய அரசு தமிழகத்திடம் அளித்தது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்ற நபர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கான பணிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.அதற்க்கு வந்த பதில் அதிர்ச்சியளித்துள்ளது.அதன்படி,மதுரையில் எந்த மருத்துவமனையின் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ” இது ஒரு பெரிய திட்டம்.பணிகள் நடைபெற்று வருகின்றன .விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்”என்று அவர் கூறியுள்ளார்.இந்த கருத்தினை பாஜக மாநில தலைவர் தமிழிசையும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி