மிகவும் பிரபலமான பர்வீன் ட்ராவல்ஸ் நிறுவனம்,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் பேருந்துகளை இயக்கி வருகிறது.அந்நிறுவனத்துக்கு, மாதாவாரத்தில் தலைமை அலுவலகமும் , புரசைவாக்கம் ,செங்குன்றம் ஆகிய இடங்களிலும் அலுவலகம் உள்ளது.அங்கெல்லாம் வருமான வரி சோதனை நடைபெற்றது.கடந்த மூன்று நாட்களாக சோதனை நடைபெற்றுவருகிறது.ஊழியர்கள் யாரும் உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.வரி ஏய்ப்பு செய்ததற்கோ , வரி மோசடி செய்ததற்கோ, இந்த சோதனை நடைபெறவில்லை. பெரிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென ஆவணங்களை சோதனை நடத்துவார்கள். எனவே,பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கணக்கு வழக்கு ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர்.இது வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு நடத்தப்படும் ரெய்டு இல்லை , கணக்கு தணிக்கைதான் பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி