அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்! post thumbnail image
கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கடந்த 23-ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தவழக்கில் ஜாமீன் பெற்றார் கருணாஸ்.காவல்துறை மீண்டும் ஒரு வழக்கினை பதிவு செய்து அவரை கைது செய்தது. ஐபிஎல் வழக்கிற்கும் ஜாமீன் பெற்ற அவர் நேற்று விடுதலையானார். விடுதலையானவுடனே சென்னை வந்த அவர்,நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் .

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ” கூவத்தூரில் நடந்தவற்றை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூற தயார். போலீஸார் என் மீது வழக்குப் பதிய மேற்கொண்ட வேகத்தை மக்கள் பணியில் காட்ட வேண்டும். காவல்துறையினர் தங்களது பணியை வேகமாக செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊடகங்களில் பேசுவதால் என் மீது பொய் வழக்கு போடுகின்றனர். கடந்தாண்டு நடந்த சம்பவங்களில் கூட காவல் துறை என் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தனர் . 16-ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த அதிமுக அரசாங்கம் எப்படி அமைந்தது” என்று கூறினார் கருணாஸ் .இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக மிரட்டல் விடுகிறார் என சலசலப்பு எழுந்துள்ளது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி