வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது அமெரிக்கா தான்.பலவருடமாக அமெரிக்காவில் இந்தியர்கள் வேலைக்கு சென்றும் ,குடியேறியும் வருகின்றனர்.அதில் பெரும்பலானோர் ஐ.டிதுறையை சார்ந்தவர்கள்.ஒபாமா காலத்தில் ஆட்குறைப்பு நடத்தி வீட்டுக்கு அனுப்பட்டவர்கள் பலர்.டிரம்ப் காலத்தில் அது இன்னும் தீவிரமடைந்துள்ளது.US Citizenship and Immigration Services அமெரிக்காவில் விசா வழங்குவது, நீட்டிப்பது, மறுப்பது போன்றவைகளை செய்வது. ஹெச் 1 பி விசாவில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் , இவர்கள் கொண்டு வந்திருக்கும் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட இருப்பது இந்தியர்கள் தான். இந்தியர்கள் யூ.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்பிடம் தங்கள் விசாவை நீட்டிக்க கேட்டும் நீட்டிப்பு கொடுக்க மறுத்திருக்கிறார்கள்.
ஹெச் 1பி விசா வைத்திருப்பவர்களில் க்ரிமினல் பின் புலம் , தேச பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குபவர்கள், மோசடி பேர்விழிகள் அவர்களெல்லாம் உடனே வெளியேற்ற படுவார்கள்.வேலை தொடர்பான வீசாவுக்காக காத்திருப்பவர்கள் தவிர மற்ற அனைவரையும் வழி அனுப்பக் காத்திருக்கிறது யூ.எஸ்.சி.ஐ.எஸ். சிறிது நாட்கள் கழித்து சாதாரண குடிமக்களும் வெளியேற்றபடுவர்.இது அமெரிக்காவில் குடியிருக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியும்,பீதியும் ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி