கேரளா போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
.
சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளளவில் நிதிநிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.கேரளாவில் மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு விருகம்பாகத்துக்கே தப்பி வந்துவிட்டார்.இதையடுத்து கேரளாவில் இவரை காணவில்லை என்றவுடன் ,கேரளா போலீசில் அம்மக்கள் புகாரளித்துள்ளனர்.இதனையடுத்து சென்னை வந்த கேரளா போலீஸ் இன்று,அவரை விருகம்பாக்கத்தில் பிடித்துள்ளனர்.காவல்துறையினரிடம் ஒத்துழைக்க மறுத்த அவர் ,அவர்களுடன் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.இதனால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர் .
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி