இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ,அங்கே சுனாமி ஏற்பட்டது .இதனால் பல மக்கள் தங்கள் வீடுகளையும் ,உடைமைகளையும் இழந்தனர்.
இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் நேற்று மாலை ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதற்கு முன்பாக 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் 20 வீடுகள் சேதமடைந்தன மற்றும் 10 பேர் காயமடைந்தனர் .இதனால் அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.பிறகு ,பாலு (Palu) டங்காலா(Donggala) ஆகிய பகுதிகளை சுனாமி தாக்கியது.இதனால் அங்கு தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.எனவே உயிர் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் தெரியவில்லை .
ஏற்கனவே கடந்த 2004 ஆண்டு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி மிகப்பெரிய அழிவை தந்தது குறிப்பிடத்தக்கது .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி