தனது புருவம் மூலமாக “ஒரு ஆதார் லவ் ” படத்தின் டீசரில் இந்தியாவையே கட்டி இழுத்தவர் மலையாள நடிகை பிரியா வாரியர் .இப்போது அந்த படத்தின் இன்னொரு பாடலால் அதே இணையத்தால் இந்தியா முழுவதும் வறுத்தெடுக்கப்படுகிறார் .
“ஒரு ஆதார் லவ் ” படத்தின் பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது . புரியாத வார்த்தைகளால் , புதுமையான இசையால் அமைந்துள்ள “பிரீக் பெண்ணே ” பாடல் . வெளியானது முதல் அப்பாடல் இதுவரை ஒரு கோடிக்கு தடவைக்கு அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.ஆனால் , அந்த பாடலுக்கு வந்துள்ள Dislikeகுகள் எட்டு லட்சத்தினை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இணையத்தில் உள்ள பலர் வேண்டும் என்றே Dislike செய்து வருகின்றனர் .இதனால் படக்குழு அதிர்ச்சியும் , ஏமாற்றமும் அடைந்துள்ளனர்
.
இதுகுறித்து அப்படத்தின் இயங்குனர் லுலு, பிரியா வாரியர் மேலுள்ள வெறுப்பினால் என் படத்தினை கொன்றுவிடாதீர்கள் என வேதனையடைந்துள்ளார் . மேலும்,வீடியோவின் கமெண்ட்களில் தமிழ் மற்றும் மலையாள திரை ரசிகர்கள் இடையே மோதலும்நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .இதே வேகத்தில் சென்றால் இந்தியாவில் அதிகம் Dislike வாங்கிய வீடியோ என்ற புகழும் சேர வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி