September 25, 2018

முதன்மை செய்திகள், விளையாட்டு

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால் வழங்கப்பட்டன . இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கென வழங்கபடும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரருமான விராட் கோலிக்கும் ,பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் . அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது .ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மந்தனா, டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்பட 20 பேருக்கு வழங்கப்பட்டது .சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் . கிரிக்கெட்டில் இதற்க்கு முன்பு சச்சினும்,தோனியும் கேல் ரத்னா விருதினை பெற்றுள்ளார்கள் .பளு தூக்குதலில் இதற்கும் முன்பு மல்லேஸ்வரி,குஞ்சரணி ஆகியோர் பெற்றுள்ளனர் .விராட் கோலி விருதினை பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .அவர்கள் தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர் .ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் விராட் கோலி தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‘.

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள்

அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் கடந்த ஒரு வருடமாக விசாரணை மட்டுமே நடத்தி கொண்டிருக்கிறது.எந்த முன்னேற்றமும் இல்லை.சிலநாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை எடுத்தபோது அந்த வளாகத்தில் பதிவான CCTV காட்சிகள் அழிந்துவிட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது.இன்று பேட்டியளித்த அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் சசிகலா மீது சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளார் .அவர் கூறுகையில் ” மயக்கமான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் .ஆனால் ,மயக்கமடையவில்லை என சசிகலா கூறுகிறார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் ஏன் காவல்துறை,உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை .போயஸ் கார்டனில் வேலை பார்க்கும் இரண்டு பணி பெண்களும் ஏன் விசாரிக்கப்படவில்லை “என கேள்வியெழுப்பியுள்ளார் . இந்நிலையில் ,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அப்பல்லோ நிர்வாகம் மீது சந்தேகமும்,குற்றச்சாட்டும் எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில் ” அம்மாவை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன்,என்னை அனுமதிக்கவில்லை .அமெரிக்காவிற்கு கொண்டு சிகிச்சையளிக்கிறோம் என கூறினேன்.அதற்கு அவர்கள் எங்கள் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லையா என சமாளித்தனர் ” என கூறியுள்ளார் .ஏற்கனவே அப்போலோ மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில்,துணை முதல்வரின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . விசாரணை துடங்கியது முதல் சசிகலா தரப்பும் ,அப்போலோ தரப்பும் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவிக்கிறார்கள்.இதன் மூலம் சசிகலாவுடன் இணைந்து அப்போலோ நிர்வாகமும் ஏதேனும் நாடகம் அரங்கேற்றியதா என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

அரசியல், செய்திகள்

உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்

பஸ் பாஸ் கட்டணத்தை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ,அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரபாக இயக்க யோசிக்காத அரசு ,இப்படி செய்வதா என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் . இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ” ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே, 100%க்கும் மேல் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு,மீண்டும் “சேடிஸ்ட்” மனப்பான்மையோடு அதிமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது” மேலும் அவர் புதிதாக வாங்கப்பட்டுள்ள பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார் . “முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம்! கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார் . 2011ஆம் 50 சதவீத பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது .மேலும் இதே அதிமுக ஆட்சியால் 2018ஆம் ஆண்டு 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.நேரத்துக்கு வராத பேருந்துகள்,ஒரே சமயத்தில் வரும் பல பேருந்துகள்.இதனால் பேருந்து உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். உதிரிபாகங்கள் வாங்குவதில் ஊழல்,நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகம்,நிர்வாக சீர்கேடு ,இதனை பார்க்கும் பொது போக்குவரத்து கழகத்தினை தனியார் மயமாக்க அரசு தயாராகிவிட்டதாக அவர் ஐயம் எழுப்பியுள்ளார். போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்குக் கைவந்த கலை என்று அ.தி.மு.க அரசு செயல்படுகிறது என கூறினார்.

அரசியல், சின்ன திரை, பரபரப்பு செய்திகள்

பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன் ,முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில அரசு அதிகாரிகளின் பெயரும் அடிபட்டன.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டன .லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது .குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது சிபிஐ. தொடர்ந்த விசாரணையில் பங்குதாரர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டனர் .குட்கா குடோனில் நடைபெற்ற பொது கைப்பற்றப்பட்ட குட்கா சோதனைக்கு அனுப்பப்பட்டது .அதனை சோதித்த உணவு பாதுகாப்பு அதிகாரியான சிவகுமார் ,அவை போதை பொருளே இல்லை என அறிக்கை அளித்திருந்தார்.இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று. இதனையே முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்ம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், பொய்யான அறிக்கை தாக்கல் செய்தது தொடர்ப்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கறது.சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 4ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

திரையுலகம்

புதிய‌ பாடலால் வருத்தெடுக்கபட்ட பிரியா வாரியர் !

தனது புருவம் மூலமாக “ஒரு ஆதார் லவ் ” படத்தின் டீசரில் இந்தியாவையே கட்டி இழுத்தவர் மலையாள நடிகை பிரியா வாரியர் .இப்போது அந்த படத்தின் இன்னொரு பாடலால் அதே இணையத்தால் இந்தியா முழுவதும் வறுத்தெடுக்கப்படுகிறார் . “ஒரு ஆதார் லவ் ” படத்தின் பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது . புரியாத வார்த்தைகளால் , புதுமையான இசையால் அமைந்துள்ள “பிரீக் பெண்ணே ” பாடல் . வெளியானது முதல் அப்பாடல் இதுவரை ஒரு கோடிக்கு தடவைக்கு அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.ஆனால் , அந்த பாடலுக்கு வந்துள்ள Dislikeகுகள் எட்டு லட்சத்தினை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இணையத்தில் உள்ள பலர் வேண்டும் என்றே Dislike செய்து வருகின்றனர் .இதனால் படக்குழு அதிர்ச்சியும் , ஏமாற்றமும் அடைந்துள்ளனர் . இதுகுறித்து அப்படத்தின் இயங்குனர் லுலு, பிரியா வாரியர் மேலுள்ள வெறுப்பினால் என் படத்தினை கொன்றுவிடாதீர்கள் என வேதனையடைந்துள்ளார் . மேலும்,வீடியோவின் கமெண்ட்களில் தமிழ் மற்றும் மலையாள திரை ரசிகர்கள் இடையே மோதலும்நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .இதே வேகத்தில் சென்றால் இந்தியாவில் அதிகம் Dislike வாங்கிய வீடியோ என்ற புகழும் சேர வாய்ப்புள்ளது.

செய்திகள், பரபரப்பு செய்திகள்

முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது .இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். வீரப்பனுடன் பணயக்கைதியாக 108 நாட்கள் காட்டில் இருந்தார் ராஜ்குமார் .பிறகு தூதர்களின் தலையீ ட்டால் விடுவிக்கப்பட்டார்.வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 14 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.2004-ம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில்,கடந்த 18 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.அதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தவிர்த்து,ஒருவர் வழக்கு நடைபெறும் போது இறந்து போனார் .ஒருவர் தலைமறைவானார் .இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் . இன்று நீதிமன்றத்தில் எட்டு பேர் ஆஜராகினர் .ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை .தீர்ப்பை வாசித்த நீதிபதி “போதிய ஆதாரங்கள் இல்லை என்பதாலும், வீரப்பனுக்கும் வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள தொடர்பினையும் நிரூபிக்காததாலும் ,இவ்வழக்கில் சம்பத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் “என அறிவித்தார் .18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது .

அரசியல், செய்திகள்

நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது – ஆளுநரை சந்தித்த எச்.ராஜா

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை ,நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார் . பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை ,நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .இது மிகப்பெரிய சர்ச்சையானது .அரசியல் கட்சி தலைவர்களும்,பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர் . இதையடுத்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை வழக்காக எடுத்துக்கொண்டது .தமிழக காவல்துறையும் ராஜாவை பிடிக்க தனி படை அமைத்தது.ஆனால் அவர் வழக்கம் போல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.எஸ்.வீ.சேகருக்கும்,ராஜாவுக்கும் ஒரு நியாமா என சர்ச்சை எழுந்தது . இந்நிலையில், எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இன்று காலை நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார் .தலைமை நீதிபதிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என கூறினார். இந்நிலையில், போலீஸால் தேடப்பட்டு வரும் எச். ராஜா ஆளுநர் பன்வாரிலாலை திடீரன சந்தித்தார் . அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை .

விளையாட்டு

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??

இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் இந்தியா ,பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறின . இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.ஹாங்காங் அணியும் பெரிதாக சோபிக்கவில்லை . சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் ,வங்கதேசம் இரண்டு ஆட்டங்களில் விளையாடி தல ஒரு வெற்றியை பெற்றுள்ளது.ஆப்கானிஸ்தான் இன்னும் வெற்றி கனியை ருசிக்கவில்லை,அதனால் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. இன்று நடைபெறும் ஒரு ஆட்டத்தில் , இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது .நாளை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இவ்விரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்குகிறது.இந்தியா ஆப்கானிஸ்தான் ஆட்டமானது வெறும் சம்பிரதாய ஆட்டம் தான்.இந்திய அணி ஏற்கனவே இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்டது.எனவே முக்கிய வீரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது . பாகிஸ்தான் ,வங்கதேசம் இடையேயான ஆட்டம் மிக முக்கிய போட்டியாகும்.இதில் வெற்றி பெரும் அணியே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும்.சமபலம் உடையே இரு அணிகளும் மோதுவதால் ,ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா , பாகிஸ்தான் போட்டிகளுக்கு இணையாக இந்த போட்டி வங்கதேச ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.எனவே ஆட்டத்தில் அனல் பறக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பாக்கின்றனர்.

திரையுலகம்

ஹிட்டடித்த சிம்டாங்காரன்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ! #Sarkar

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில்,முருகதாஸ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடிக்கும் “சர்கார் ” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.மெர்சல் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் சர்கார் .ரசிகர்களிடமும்,மக்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் வெகுநாட்களாக காத்திருந்தனர் .சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தது .இந்நிலையில், “சிம்டாங்காரன்” எனும் படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டது . ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இப்பாடலை , கவிஞர் விவேக் எழுதியுள்ளார் . வழக்கமான ரகுமான் பாடல்கள் போல் வெளியானவுடன் மிகப்பெரிய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் , கேட்க கேட்க பாடல்கள் பிடிக்கிறது என ரசிகர்கள் தெரிவித்தனர் . சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களும் நடந்தேறின .வெளியான 17 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களால் Youtubeல் பார்க்கப்பட்டுள்ளது . பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் கூறுகையில் ” சென்னை தமிழில் சிம்டாங்காரன் என்றால் “கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் ” Attractive Young Man – Charismatic / Fearless / Audacious ,கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். படத்தின் இசை வெளியிட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது . அதற்காக போட்டிகளையும் சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள்

ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???

நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி என்னதான் நடந்தது இந்த ரபேல் விவகாரத்தில் ? விரிவாக பார்க்கலாம் . ஆசிய கண்டத்தில் மிகவும் ராணுவ வலிமைமிக்க நாடான இந்தியா கடைசியாக போர் விமானங்கள் வாங்கியது எப்போது தெரியுமா ? 1996இல் . ஆம், 1996ல் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுகோய் விமானம் தான் கடைசி. பிறகு உள்நாட்டிலேயே தேஜஸ் எனும் இலகு ரக போர் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டு ,மிகவும் தாமதமாக 2016ல் தான் விமானபடையில் சேர்க்கப்பட்டது .2007ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு ,டெண்டர் கோரப்பட்டது .2012ஆம் ஆண்டு பல் வேறு போட்டிகளுக்கு மத்தியில் பிரான்சின் தஸ்ஸோ நிறுவனத்திடம் ரபேல் ரக விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது .அதில் , 18 விமானங்கள் பறக்க தயார் நிலையில் தரப்படும் என்றும் , 108 விமானங்கள் இந்தியாவின் அரசு நிறுவனமான HAL ( ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ) மூலமாக இந்தியாவிலே தயாரிக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது .2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது . அதன் பிறகு ஒப்பந்தம் சிறிது காலம் கிடப்பில் போடப்படுகிறது.2015ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி ,புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவிக்கிறார்.அதன்படி , உடனடியாக பறக்கும் நிலையில் 36 போர் விமானங்கள் வாங்குவதெனவும் ,முந்தய ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிட்டதென அறிவித்தார்.2016ஆம் ஆண்டு ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது .   இதில் என்ன ஊழல் உள்ளது ? 1.முதலாவதாக மன்மோகன் சிங் ஆட்சியில் ரபேல்க்கு நிர்ணயித்த விலை சுமார் ரூ.526 கோடி . ஆனால் , மோடி ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தின் படி விமானத்தின் விலை ரூ .1670 கோடி . மும்மடங்கு விலை அதிகம் என 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது . 2.முந்தைய ஒப்பந்தத்தில் 108 விமானங்கள் உள்நாட்டில் தயாரிப்பதன முடிவாகி இருந்தது .ஆனால் ,இப்போது அனைத்து விமானங்களும் பிரான்சில் தயாராவது என ஒப்பந்தம் போடப்பட்டது.இதனால் மோடியின் மேக் இன் இந்தியா என்னவாயிற்று என சர்ச்சை எழுந்தது . 3.ஒப்பந்தத்தின் படி பிரான்சின் டசால்ட்ஸ் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் அதன் ஒத்துழைப்பு நிறுவனங்கள்,HAL ( ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ) ,DRDO ஆகியவை விமான தயாரிப்பில் ஈடுபடும் என வரையறுக்கப்பட்டது . ஆனால் , HAL புறக்கணிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .மேலே குறிப்பிட்ட அந்த ஒத்துழைப்பு நிறுவனம் தான் ரிலையன்ஸ் . 4.டெண்டர் இல்லாமல்,மதிப்பீடு ,தொழில்நூட்ப குழு, பரிசீலனை இல்லாமல் ஒப்பந்தந்தை மோடி தன்னிச்சையாக அறிவித்ததன் பிண்ணனி என்ன ? 5.பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் போது , தொடங்கப்பட்டு சில நாட்களே ஆன “ரிலையன்ஸ் டிபென்ஸ் ” அதிபர் அனில் அம்பானி கூடவே சென்றதன் பின்னணி என்ன ? HAL புறக்கணிக்கப்பட்டு ,எந்த முன்னனுபவமும் இல்லாத ரிலையன்சுக்கு ஏன் தஸ்சோ கூட்டாளி அந்தஸ்து வழங்க வேண்டும் ? 6.ரிலையன்ஸ் ஏன் கூட்டணியாக சேர்த்து கொள்ளப்பட்டது என அரசிடம் கேட்டால், “எங்கள் முடிவு அல்ல அது, பிரான்ஸ் நிறுவனதின் முடிவு ” என கூறியது . ஆனால் , இந்தியாவுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒல்லாந் என்ன கூறுகிறார் என்றால் ” ரிலையன்ஸை வற்புறுத்தி சேர்த்தது இந்தியா அரசு தான் ” என்கிறார்.இது பெரும் அதிர்ச்சியையும் ,திருப்பதையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் புகார் தொடர்பாக அரசிடம் இருந்தோ ,பிரதமரிடம் இருந்தோ உரிய விளக்கம் தரப்படாதது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top