தமிழிசை பயணம் செய்த அந்த விமானத்துக்குள்ளேயே ஒரு தனியாளாக சக விமான பயணி சோபியா என்கின்ற இளம் பெண் பாரதீய சனதாக்கு எதிராக முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாரதீய சனதாவை விமர்சித்து முழக்கமிட்ட அந்த பெண்ணிடம் பாரதீய சனதா தமிழக தலைவர் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாரதீய சனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாரம் உத்தரவு கொடுத்தவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய காவல்த்துறை உடனடியாக கைது செய்து தமிழிசையை குளிர்வித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி