மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ‘மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது. ரேஷன் அட்டையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு பரிந்துரைதான் செய்துள்ளது. அதை மாநில அரசு கொள்கை முடிவாக எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி