கடந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது அதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். தங்க மகனை அன்று நாடே பாராட்டியது, இந்த நிலையில் பல்வேறு விளையாட்டு வீரர்களும் மாரியப்பனை பாராட்டினர். அவருக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும் பாராட்டும் வழங்கப்பட்டது, இந்நிலையில் புகழ்பெற்ற மட்டைப்பந்து வீரர் வீரேந்திர சேவாக் மாரியப்பனை மீண்டும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், சிறு வயதிலேயே மாரியப்பனின் தந்தை கைவிட்டு சென்றதால் அவரது தாய் சரோஜா காய்கறிகளை விற்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். தாயும், மகனும் கடுமையாக உழைத்துள்ளனர். ஏழ்மையான நிலையில் மாரியப்பன் வளர்ந்தபோதிலும் நாட்டுக்கு பெருமையை சேர்த்துவிட்டார் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி