செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!… post thumbnail image
காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் நிவாரண உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானவர்களுக்கு இடவசதி இல்லாததால் திறந்த வெளியிலும், தற்காலிக கூடாரங்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் உறங்கும் நிலையில், மழை பெய்து அவர்களின் உறக்கத்தை கெடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பூகம்பத்தால் படுகாயமடைந்த 8000 பேருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையும் சவாலானதாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 10000-ம் ஆக உயரும் என அந்நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி