ஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.அவர் ஹரித்துவாரில் நேபாள பூகம்பம் குறித்து நிருபர்களிடம் கூறும்போது, ராகுல்காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு புனிதமான கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். இதனால் தான் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது என்றார். மேலும் இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகள் பெறவேண்டும் என்றும் சாக்ஷி மகராஜ் கூறினார். அவரது இந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி