பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள். நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது. அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர் (சுமார் 12 கோடி ரூபாய்) நிதி கொடுத்துள்ளது.
பூகம்பத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் சர்வதேச மருத்துவ நிறுவனம் (International Medical Corps) தீவிர மருத்துவ சேவை செய்து வருவதுடன், மருந்துகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களையும் விநியோகிக்கிறது.
நீங்கள் தரும் பணம் உயிர் தப்பியவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி புத்துயிர் கொடுக்கும், புதிய நேபாளை கட்டமைக்க உதவும். ஆகையால் தாராள மனதுடன் நிதியுதவி செய்யுங்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி