சென்னை:-ஆந்திராவில் நடிகை கல்யாணி பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். இவரை கராத்தே கல்யாணி என்று அழைக்கின்றனர். நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் ஜஹாங்கிர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வனஸ்தலிபுரம் போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள். அங்கு நடிகை கல்யாணியும் மேலும் சிலரும் சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர். கல்யாணியையும் மற்றவர்களையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 8 மொபைல் போன்கள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். போலீசை பார்த்ததும் முதலில் சூதாட்டக்காரர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று கைது செய்தார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி