சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v’ வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்களின் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா லட்சணம்’ பொருந்திய இளம்தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர்.
சமீபத்தில் சீன சமூகவலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவளது புதிய புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ‘Like’கள் குவிந்துள்ளன. எனினும், அதில் ஒரு ‘Like’ அவளை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி