நியூயார்க்:-உலகிலேயே துல்லியமான எமரால்ட் வைரம் என்ற தரச்சான்றிதழ் பெற்ற வெள்ளை நிற பரிசுத்த வைரம் 139 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஐஸ் கட்டியை போல் பளபளக்கும் இந்த வைரம் 100.20 கேரட் தரம் கொண்ட மிக துல்லியமான வைரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல் பட்டை தீட்டி, மெருகேற்றுவதற்கு முன்னர் 200 கேரட்டுக்கு மேற்பட்ட எடையுடன் இருந்தது.
நியூயார்க் நகரில் உள்ள சோத்ஸ்பை ஏல நிறுவனம் இந்த வைரம் சுமார் 19 மில்லியன் முதல் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்த்திருந்தது. இந்த ஏலத்தில் அந்த வைரம் 2 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு 138 கோடியே 85 லட்சம் ரூபாய்) விலைபோய் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி