அதைத் தொடர்ந்து அவர் லஞ்ச ஊழல் ஆணையக்குழுவில் ஆஜராகி இன்று வாக்குமூலம் அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.இரவு முழுவதும் பாராளுமன்றத்தில் முற்றுகையிட்டு 100 எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ராஜபக்சே மீதான அந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். அதையடுத்து நேரில் சென்று ராஜபக்சேயிடம் வாக்குமூலம் பெற லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு சம்மதித்தது. இந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்பு இன்று ஆஜராகி வாக்குமூலம் அளிக்க முடியாது என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு தலைவர் ஜகத் பாலபட்ட பெந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அதிபர் வரைமுறையில் எனக்கு கிடைத்த அதிகாரத்தின் அடிப்படையிலேயேதான் திஸ்ச அந்த நாயக்கவிற்கு மந்திரி பதவி வழங்கினேன்.என்ன காரணத்துக்காக என்னிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை லஞ்ச ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. எது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது.யார் என் மீது புகார் செய்தார்கள். எப்படிப்பட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படும் முறை குறித்தும் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி