நிலையான அபிவிருத்தி தீர்வு அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியை தந்துவிடாது. நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல்ல சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மனித சமூகம் எப்படி வாழ்கிறது என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.
ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், வயதானவர்களை விட இளைஞர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் கிரீஸ் நாடு இப்பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது. அதே போல் அரசியல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக எகிப்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் சரிவை சந்தித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி