சென்னை:-நடிகர் அஜித்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த வருடம் ஆரம்பம் முதலே சந்தோஷமான தருணங்கள் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என கொண்டாட்டம் தான்.
இந்நிலையில் இன்று அஜித்-ஷாலினி அவர்களுக்கு 15வது திருமண நாள். முதல் முதலாக அமர்க்களம் படத்தில் தான் இருவரும் இணைந்து நடித்தார்கள். அப்போது ஏற்பட்ட காதல், பின் திருமணமாக அரங்கேறி திரையுலகின் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். சினிமா ஜோடிகள் என்றாலே வெறும் காதலிப்பதோடு மட்டும் தான் என்று ஒரு கருத்து நிலவிய போது, இவர்களின் காதல் திருமணம் தான் பலருக்கும் உதாரணமாக அமைந்தது. இவர்களுக்கு அனோஷ்கா என்ற செல்ல மகளும், ஆத்விக் என்ற குட்டி இளவரசனும் உள்ளனர். இதில் ஆத்விக் பிறந்து 3 மாதங்கள் தான் ஆனது, இதனாலேயே ’தல’க்கு இந்த திருமணம் நாள் ஸ்பெஷல் தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி