புது டெல்லி:-விண்ணப்பித்து 48 மணி நேரத்தில் பான்கார்டு பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் பான்கார்டை பெறலாம். அனைவரும் பான்கார்டு பெறும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கும், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும் பான்கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான நகைகளை வாங்கும் போதும் பான்கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி