செய்திகள் சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு!…

சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு!…

சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு!… post thumbnail image
பீஜிங்:-தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டைனோசர் முட்டை படிமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை படிமங்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைத்து படிமங்களும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நகரத்தில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்திற்கு அதிகமான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு முதல் முறையாக 1996-ல் ஒரு கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டிய போது உருண்டையான சில பொருட்கள் கிடைத்தன. முதலில் அது டைனோசர் முட்டை என தெரியாமல் குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே அதிகமான டைனோசர் முட்டை படிமங்களை வைத்துள்ளது. இங்கு மொத்தமாக 10,008 முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி