நியூடெல்லி:-டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை கொல்கத்தா அணி 146 ரன்களில் சுருட்டியது. சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு விக்கெட்டுக்கள் சாய்த்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டை வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் மலிங்கா (124), அமித் மிஸ்ரா (106), ஹர்பஜன் சிங் (100) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இச்சாதனை குறித்து சாவ்லா கூறியதாவது:-
சுழற்பந்தில் இரண்டு பவுண்டரிகள் வரை பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதே சமயத்தில் நாங்கள் விக்கெட்டும் எடுப்போம். லெக் ஸ்பின்னராக இருக்கும் நான் இரண்டு பவுண்டரிகள் விட்டுக்கொடுத்து விக்கெட்டை கைப்பற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு சாவ்லா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி