செய்திகள் பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…

பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…

பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!… post thumbnail image
டோக்கியோ:-புதிதாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜப்பான் மக்கள் தொகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 2013 -2014 இடைப்பட்ட காலத்தில் அந்த நாட்டின் மக்கள் தொகை 2 லட்சத்தி 15 ஆயிரம் குறைந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 0.17 சதவீதம் ஆகும். இது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்ச மக்கள் தொகை சரிவாகும். கடந்த 2008-ல் இருந்ததை விட தற்போது அந்நாட்டில் 10 லட்சம் மக்கள் குறைவாக உள்ளனர். ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரை சேர்க்காவிடில் இந்த எண்னிக்கை மேலும் குறையும்.

அந்த நாட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் அல்லது குழந்தை பெற்று கொள்ளாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோரும் அதிகரித்து வருகிறது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நான்கில் ஒருவர் 65 வயதிற்கு மேல் ஆனவர்களாக உள்ளனர். இதே வேகத்தில் குறைந்துகொண்டே சென்றால் 2060-ம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை தற்போது இருப்பதை விட 40 மில்லியன் குறைவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மக்கள் தொகை 0.68 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் தலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி