குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் என்னால் எளிதாக நடிக்க முடியும். முத்தக் காட்சி, கிளாமர் நடிப்பு ஆகியவற்றிற்கு எதிரானவள் நான். என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளிலும் நான் நடிக்க மாட்டேன். முதலில் ஒரு கதாபாத்திரம் என்னைக் கவர வேண்டும். நான் சிறப்பாக நடிக்க அந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு சவாலைக் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும், எனக் கூறியிருக்கிறார். மேலும், திரைப்படங்களில் கௌதமி நடித்த கதாபாத்திரங்களைப் போல நடிக்க ஆசை என்றும் சொல்லியிருக்கிறார். எல்லாரும் ரேவதி, சுகாசினி, ராதா ஆகியோரை முன்மாதிரியாகச் சொல்வார்கள், அதிலும் ஸ்ரீதிவ்யா வித்தியாசமாக கௌதமியை சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி