இந்தியாவைப்போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்து செல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர் இந்திய மக்களுடன் டிவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை கற்பனை செய்கிறார்.அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு சின்னத்துக்கு சென்றிருந்தோம். மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்பமுகத்தன்மை பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றிப் பாதுகாக்கத்தக்க வலிமை வாய்ந்தவை என்பதை விவாதித்தோம். 100 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் இணைந்து வாழுவதை உலகத்திற்கு ஊக்கம் தரத்தக்க முன்மாதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி