சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து Post Production வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. படம் தொடங்கிய போது படத்தை மே 1ம் தேதி விடுமுறை நாட்களில் வெளியிடுகிறோம் என்று அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் தள்ளி போனது, தற்போது படம் மே 11ம் தேதி வெளியாகும் என வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல சின்ன படங்கள் விடுமுறை மாதமான மே மாத்தில் எப்படியாவது வெளியிட வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவை கொஞ்சம் சற்றே யோசிக்கும். மேலும் மாஸ் படத்தின் பாடல் வெளியிட்டு விழா இந்த மாத இறுதிக்குள் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி