அவர்களுக்கும், சினிமா தொழிலை அழிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர்கள் அனைவரும் சினிமாவை நேசிப்பவர்கள்தான். எனினும், சட்டதிட்டங்களை உள்ளடக்கி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகளை அடிப்படையாக வைத்து, அந்த வரம்புக்குள் இருந்து தங்களது வேலையை அவர்கள் செய்து வருகின்றனர். சென்சார் வாரியத்துக்கு எதிரான எனது போராட்டம் அதில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. சென்சார் வாரியம் எனது சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் ஒடுக்குகின்றது என்று நான் கூறினால் அந்த கருத்து மத்திய சென்சார் வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானி மற்றும் இதர அதிகாரிகளுக்கு எதிரான கருத்து அல்ல. அவர்கள் எல்லோருமே எனது நண்பர்கள். ஆனால், இந்தப் போராட்டமானது.., சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடைபெற்றுவரும் நெடுநாளையப் போராட்டமாகும். இதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்’ என்று கூறியுள்ளார்.
கமலின் அடுத்த படமான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ’இந்த எதிர்ப்பு உருவாக ‘எனது நாத்திக கொள்கைகள்தான் காரணமாக உள்ளது. அவரவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை இருப்பதுபோல் எனது வாழ்க்கை முறை நாத்திகமாக உள்ளது. எனது பெற்றோர் இந்துக்களாகவும், வைணவர்களாகவும் அறியப்பட்டவர்கள். நான் எப்படி மக்களை வெறுக்க முடியும்?. எனது ரசிகர்களை நான் இழக்க விரும்புவதாக பிறர் நினைப்பது.., அவர்களின் அறியாமை என்றுதான் கருத வேண்டும், ’உத்தம வில்லன்’ படம் இந்துக்களான ஆத்திகர்களைப் பற்றியதோ, நாத்திகர்களைப் பற்றியதோ அல்ல; மக்களைப் பற்றியப் படம். எனவே, அனைத்து தரப்பு மக்களும் எனது படத்தை பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி