சென்னை:-நான் அவனில்லை, அரவான், சினேகிதியே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுவேதாமேனன். துணை முதல்வர் படத்திலும் பாக்யராஜ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
மலையாளம் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் சுவேதா மேனன் பங்கேற்று வருகிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. சுவேதாமேனன் இதில் பங்கேற்று நடித்தபோது திடீரென தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி