செய்திகள்,விளையாட்டு என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…

என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…

என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!… post thumbnail image
கொல்கத்தா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இப்போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சியடைய செய்தது. கோலியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு அவரது காதலி அனுஷ்கா தான் காரணம் என்று வசை பாடிய ரசிகர்கள், இதுபற்றி கேலியும் கிண்டலும் கலந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதுபற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விராட் கோலி, மனம் திறந்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, தனது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியதற்கு என் காதலி அனுஷ்கா காரணம் என்று விமர்சனம் செய்தது என்னை மிகவும் காயப்படுத்தியது. இவ்வாறு கூறுபவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும் என்பதை நான் ஒரு மனிதனாக கூறுகிறேன்.கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு நான் துணை நின்றிருக்கிறேன். அணியில் மற்ற வீரர்களை விட நான் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். என்னை விட சிறப்பாக செயல்பட்டவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து வரும் எதிர்ப்புகள் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருகிறது. இது நீங்கள், நிறைய மக்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது.

ஒரு வழியில் இதுவும் நல்ல எண்ணம்தான். நீங்கள் உங்களுடன் யார் உள்ளார், யார் இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், விமர்சனங்கள் மிகவும் ஏமாற்றம் அடைய செய்தது.என்னுடைய அதிரடி எப்போது வரும் என்பது எனக்கே தெரியாதபோது ஊடகங்கள் அதை தீர்மானிப்பது வேடிக்கையாக உள்ளது. என் விவகாரத்தில் நான் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்றால் அது என்னுடையை பார்மில் சரிவு. ஆனால், சில வீரர்களின் செயல்பாடு 10 போட்டிகளில் இரண்டில் சரியாக இருந்தால்கூட அவர்கள் பார்மிற்கு வந்ததாக கூறுகிறார்கள். அதனால், இந்த அளவுகோலில் நான் கவனம் செலுத்த மாட்டேன். குறிப்பிட்ட போட்டியில் பந்தை எப்படி விளாசுகிறோம் என்பதைப் பொருத்துதான் அது அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி