இனிமேல் இலவச அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு பாஸ்வேர்ட் தேவையில்லை. அதேபோல் கூகுள் தளத்திற்கு செல்வதற்கான வழிமுறையும் இந்த மேம்படுத்தப்பட்ட வடிவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் தனி உதவி மையத்தின் செயல்பாடுகளையும் அதிகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் முன்பைவிட அதிக மொழிகளை பயன்படுத்த முடியும். இதைக்கொண்டு போனுக்கு அழைப்பு வந்த உடன் நேரடியாக ஸ்பீக்கரை பயன்படுத்தவும் முடியும்.
தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற குறுஞ்செய்திகள் பற்றி புகார் அளித்து தவிர்ப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது கவனத்தை ஐ.ஓ.எஸ்.9 பக்கம் திருப்பியுள்ளது. வரும் ஜூன் மாதம் இந்த புதிய இயங்குதளம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி