ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மோட்டார் ‘பைக்’ பிரியர். விதவிதமான மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வது அவருக்கு பிடித்த ஒன்றாகும். நேற்று முன்தினம் டோனி சொந்த ஊரான ராஞ்சியில் ஹெல்மெட்டுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார். அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருந்தது தெரியவந்தது. அவரது பைக்கில் நம்பர் பிளேட் முன்பக்கமாக இல்லை. முன்பக்க சக்கரத்தின் பக்கவாட்டில் நம்பர் பிளேட்டுடன் அவர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார்.
டோனியின் இந்த செயல் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றமாகும். இதற்காக அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்க ராஞ்சி போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறும்போது, இது ஒரு பெரிய விஷயம் இல்லை. கிரிமினல் குற்றம் கிடையாது. சரியான நேரத்தில் டோனிக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி