சென்னை:-நடிகை தமன்னா, தமிழில் கடைசியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த ‘பாகுபலி’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுவரையில் கிசுகிசுக்கள் எதிலும் அவர் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகரின் காதல் வலையில் விழுந்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
அந்த நடிகர் பெரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தமன்னாவுடன் அவர் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது காதல் பற்றிக் கொண்டது என்றும் கூறுகின்றனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக போய் வருகிறார்களாம். தமன்னாவின் ரகசிய காதல் விவகாரம் விரைவில் அம்பலத்துக்கு வரும் என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி