சென்னை:-நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ திரைப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் சென்சார் பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தேதி குறிப்பிடாமலேயே ஒத்திவைக்கப்பட்ட இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் தொழிலாளர்கள் தினமும், நடிகர் அஜித் பிறந்தநாளுமான மே 1-ந் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி