வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே மின் நிலையம் ஒன்றில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் தலைநகரம் வாஷிங்டனிலும், வெள்ளை மாளிகையிலும் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது.
பல அரசு அலுவலகங்கள், உள்துறை, நீதித்துறை, மேரிலேண்ட் பல்கலைக்கழகம், உலக வங்கி அலுவலகங்களும் இருளில் மூழ்கியதால் பணிகள் ஸ்தம்பித்தன. வாஷிங்டனுக்கு தெற்கில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டதே இந்த மின் தடைக்கு காரணமாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி