பிரபல பத்திரிக்கையில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் ஒருவரின் மகளுக்கு கேன்சர் பாதிப்பு. பல லட்ச ரூபாய் இருந்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்கிற நிலைமை. திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த தகவல் போக, கையில் கிடைத்ததைக் கொடுத்திருக்கிறார்கள் பலரும். இதில் அதிகபட்ச தொகையே ஐம்பதாயிரம்தானாம். இதற்கிடையில் குமரேசனும் பத்திரிக்கை நண்பர்கள் சிலரும் அஜீத்தை சந்தித்து இதுகுறித்து சொல்லியிருக்கிறார்கள்.
கவலையோடு கேட்ட அஜீத் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போயிருக்கிறார்.ஒரு சிறிய பேக்கோடு வெளியேவந்திருக்கிறார். அதைக் குமரேசனிடம் கொடுத்து, ‘இதில் எவ்வளவு இருக்குன்னு எனக்கு தெரியாது. இப்போதைக்கு இதை வைச்சு மகளோட ட்ரீட்மெண்டை ஆரம்பிங்க. நானே மறுபடியும் உங்களை கூப்பிடுறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் அஜீத். கூடவே, நான் உங்களை பத்திரிக்கையாளரா நினைச்சு இந்த உதவியை பண்ணலை. தயவுபண்ணி அஜீத் இப்படி உதவினார்னு எழுதிடாதீங்க என்றும் சொல்லியிருக்கிறார் அஜீத். அவர் கொடுத்த பையில் இருந்தது 13 லட்சங்களாம்…தலை சுத்த வைக்குறீங்களே ‘தல’ என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி