ஆனால் இருவருக்கும் இடையேயான மோதலை பலரும் நேரில் கண்டுள்ளனர். விமானம் புறப்படுவதற்கு முன், டேக் ஆப் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்களை குறிப்பெடுக்குமாறு விமானி இணை விமானியிடம் கூறியுள்ளார், அதாவது விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், டேக் ஆப் செய்யும்போது விமானத்தின் எடை மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து விமானியின் இருக்கைக்கு முன் இருக்கும் காகித அட்டையில் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
விமானியின் இந்த உத்தரவால் அதிருப்தியடைந்த இணை விமானி, விமானியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பாத விமானி, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விமானத்தை டேக் ஆப் செய்து டெல்லிக்கு பறந்து சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி