இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, நமக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொண்டு, சேர்ந்து செயல்படுவதன் மூலம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கல்விக்காக ஒதுக்கப்படும் 2.8 சதவீத நிதி மிகவும் குறைவானது. வளர்ந்து வரும் பல நாடுகள் 3.5 சதவீதம் ஒதுக்க ஆரம்பித்து உள்ளன. இந்த அளவானது வளர்ச்சியடைந்த நாடுகளில் 5 முதல் 6 சதவீதமாக இருக்கிறது. கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே ஏற்றத்தாழ்வுகளை போக்கமுடியும்.
இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றது சிலருக்கு சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதால் இதை நடத்துபவர்களின் கொள்கை அல்லது அவர்களின் நோக்கங்களை ஏற்று கொள்வதாக ஆகாது என்று தெரிவித்தார். அஸிம் பிரேம்ஜி கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக நன்கொடைகளை அளித்து வருவதுடன் தனியாக பல்கலைக்கழகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி