இது தொடர்பாக வருமானவரி இலாகா வெளியிட்டு இருக்கும் பொது அறிவிப்பில் இந்த கம்பெனிகளின் பான் நம்பர்கள் மற்றும் கடைசியாக அந்த கம்பெனிகள் கொடுத்த முகவரிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த அறிவிப்பில் வரிபாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. வருமானவரி செலுத்தாமல் உள்ள பெரிய கம்பெனிகளும், அவை செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை விவரமும் வருமாறு:-
1. சோமானி சிமெண்ட்- ரூ.27.47 கோடி
2. புளூ இன்பர்மேஷன் டெக்னாலஜி- ரூ.75.11 கோடி
3. ஆப்பிள்டெக் சொலுயூசன்ஸ்- ரூ.27.07 கோடி
4. ஜூபிடர் பிசினஸ்- ரூ.21.31 கோடி
5. ராக் பயோடெக்- ரூ.18.54 கோடி
6. ஐகான் பயோ பார்மா அண்ட் ஹெல்த்கேர்-ரூ.17.67 கோடி
7. பான்யன் அண்ட் பெர்ரி அலாய்ஸ்- ரூ.17.48 கோடி
8. லட்சுமிநாராயண் தாக்கர் -ரூ.12,49 கோடி
9. விராக் டையிங் அண்ட் பிரிண்டிங்- ரூ.18.57 கோடி
10. பூனம் இண்டஸ்டீரீஸ்- ரூ.15.84 கோடி
11. குன்வர் அஜய் புட் பிரைவேட் லிமிடெட்- ரூ.15 கோடி
(இந்த நிறுவனங்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவை)
மும்பை-கொல்கத்தா கம்பெனிகள்
12. கோல்ட்சுக் டிரேட் இண்டியா(ஜெய்ப்பூர்)- ரூ.75.47 கோடி
13. விக்டர் கிரெடிட் அண்ட் கன்ஸ்டிரக்ஷன்(கொல்கத்தா)- ரூ.13.81 கோடி
14. நோபல் மெர்சாண்டிஸ்(மும்பை)- ரூ.11.93 கோடி
15. ஜி.கே. தர்னேவின் சட்ட வாரிசு(புனே)- ரூ.38.31 கோடி மற்றும் 3 கம்பெனிகள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி