டாக்கா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்துள்ளார். உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான அரை இறுதியில் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொண்டதாக வங்காள தேசத்தை சேர்ந்த அவர் ஏற்கனவே புகார் கூறி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார். ஐ.சி.சி.யையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி