டோக்கியோ:-ஜப்பானில் உள்ள ஒசாகாவை சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா வயது 117. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் இவர் தனது 117–வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிலையில் உடல் நலக்கோளாறால் அவதிப்பட்ட அவர் ஒசாகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவருக்கு 3 குழந்தைகளும், 4 பேரக்குழந்தைகளும், 6 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உயிருடன் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி