லிமா:-பெருவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானார்கள். அங்குள்ள அயாகுச்சோ பகுதியில் சாஞ்செஸ் நெடுஞ்சாலையில், நஸ்கா நகரிலிருந்து பிக்குயோ நகருக்கு அப்பேருந்து சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை காவல்துறை தலைவர் ஓர்பைல்ஸ் பிராவோ, ரேடியோவுக்கு வழங்கிய செய்தியில் கூறினார்.
இந்த விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 49 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். முன்னதாக இவ்விபத்தில் 12 பேர் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என பிராவோ மேலும் கூறினார். அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி