செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: விமானம் அவசரமாக தரையிறக்கம்!…

வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: விமானம் அவசரமாக தரையிறக்கம்!…

வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: விமானம் அவசரமாக தரையிறக்கம்!… post thumbnail image
இஸ்தான்புல்:-துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 விமானம் நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோவுக்கு புறப்பட்டு சென்றது. TK15 என்ற எண் கொண்ட விமானத்தில் 256 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கழிவறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு (BOMB) என்று எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து விமானம் மொராக்கோவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். கடிதம் வெடிகுண்டு மிரட்டலுக்கானதா என்பதை ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தவில்லை. வெடிகுண்டு என்று எழுதப்பட்டிருந்த காரணத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று கூறிய துருக்கி ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர், மிரட்டல் விடுக்கப்பட்டதா?… என்பதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், அவசரமாக இறக்கப்பட்ட விமானம் உரிய அனுமதி பெற்று மீண்டும் பிரேசிலுக்கு புறப்பட்டுச்சென்றது என்றார்.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த இரண்டு நாட்களில், இரண்டு வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொண்டு உள்ளது. நேற்று முன்தினம், இஸ்தான்புல் நகரில் இருந்து டோக்கியோ புறப்பட்டு சென்ற TK-52 எண் கொண்ட துருக்கி விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கழிவறையில் சி4-கார்கோ என்று எழுதப்பட்டு இருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி