இந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசான பப்லியஸை அவரது சகோதரர் டிபேரியஸ் கொலை செய்ய திட்டமிடுகிறார். இந்த சதியில் இருந்து பப்லியஸை காப்பாற்ற லூசியஸ் என்னும் அதிகாரி பப்லியஸ் மற்றும் மக்களுடன் வைல்ட் கீஸ் கேட் நோக்கி வருகிறார். தனது மக்களுக்கு தங்க இடம் தேடும் லூசியஸ், வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்கி அந்த இடத்தை கைப்பற்ற முயலுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜாக்கிசானுக்கும் லூசியசிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.இந்த சண்டைக்கு முடிவு தெரிவதற்கு முன்பே அந்த இடத்தில் மணல் புயல் ஏற்படுகிறது. மணல் புயலின் போது பாதுகாப்பில்லாமல் லூசியஸ் மற்றும் அவரது மக்கள் இறந்துவிடுவார்கள் என்பதால் ஜாக்கிசான் அவர்களுக்கு வைல்ட் கீஸ் கேட்டில் அடைக்கலம் தருகிறார்.இந்நிலையில், வைல்ட் கீஸ் கேட் கோட்டையை விரைவாக கட்டி முடிக்கும்படி அதன் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு வருகிறது. ஜாக்கிசானை அழைக்கும் நிர்வாக அதிகாரி கூடுதலாக சீனாவில் இருந்து ஆட்களை அழைத்து வரும்படி கூறுகிறார்.
ஜாக்கிசான் நிர்வாக அதிகாரியிடம் வேலையை விரைவாக முடிக்க ரோம் பகுதியில் இருந்து வந்திருக்கும் மக்களின் உதவியை பெற்றுகொள்ளலாம் எனவும், அவர்களை தங்களுடன் தங்க வைத்து கொள்வதாகவும் கூறி சம்மதம் வாங்குகிறார்.
ஜாக்கிசானின் முயற்சியால் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக கோட்டையை கட்டுகின்றனர். இந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசை கொலை செய்ய முயன்ற டிபேரியஸ் வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்க தனது படையோடு வருகிறார்.கீஸ் கேட் பகுதியில் நடக்கும் போராட்டத்தில் ரோம் அதிகாரி லூசியஸ் இறந்துவிட, இறுதியில் ஜாக்கிசான் ரோமின் வாரிசை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை இயக்குனர் அழுத்தமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்.
சரித்திர படமென்பதால் டிராகன் பிலேட்டின் தயாரிப்பு செலவு மிக அதிகமாக உள்ளது. சீனாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. வழக்கமான ஜாக்கிசான் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் ஒற்றுமையின் மகத்துவத்தையும் மையப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கிறார். படத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு, தொழில்நுட்ப திறன்கள் நன்றாக இருந்தாலும் நீளமான வசனங்கள் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது. ஜாக்கிசான் மற்றும் திரையில் தோன்றும் பிற கதாபாத்திரங்களும் தங்களின் வேலையை சரியாக செய்துள்ளனர். டிராகன் பிலேட் படத்தை ஜாக்கிசானின் திறமையான நடிப்பிற்காக பார்க்கலாம்.
மொத்தத்தில் ‘டிராகன் பிலேட்’ அதிரடி………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி