கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அந்த நபர் தாடி வளர்த்து வருகிறார். அந்நபரின் மனைவியும் தனது முகத்தை மறைத்து பர்கா அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இருவரின் செயல்பாடுகளும், சண்டையை உருவாக்குவதாவும், பிரச்சினையை தூண்டுவதாகவும் இருந்ததாக கூறி நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.
கடந்த ஒரு வருடமாக தாடி வளர்ப்பது குற்றம் என அந்நாட்டு அரசு பல இடங்களில் விளம்பரம் செய்து வருகிறது. அதே போல் ‘அழகு திட்டம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம், பெண்களை ஊக்கப்படுத்துவதுடன், முகத்தை மறைக்கும் ஆடையை உடுத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருவருக்கும் பலமுறை எச்சரிகை விடுக்கப்பட்ட போதும், அவர்கள் கண்டுகொள்ளாததால், இருவர் மீதும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி