மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பிராட் ஹாடின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த பிறகு ஹாடின் கூறியதாவது:- லீக் போட்டியில் நியூசிலாந்து சென்று விளையாடியபோது நியூசிலாந்து வீரர்கள் எங்களிடம் அமைதியாகவும், நல்ல விதமாகவும் நடந்து கொண்டார்கள். என்னால் அப்படி விளையாட முடியாது.
இதுபற்றி அணி ஆலோசனை கூட்டத்தில் நான் பேசும்போது, உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மறுபடி அவர்களுடன் மோத நேர்ந்தால், களத்தில் அவர்களை கடுமையாக சீண்டப் போகிறேன். இதனால் நான் சில ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவது இல்லை. ஏனெனில் உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவது இல்லை என தெரிவித்தேன்.இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் பிராட் ஹாடின் இனிமேல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி