நாள் ஒன்றுக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் உடலுக்கும் உகந்த ஒன்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருநாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் இறப்பதற்கான அபாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது. அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
அதேவேளையில், நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு, மனஅழுத்தம், இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய்கள், ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணிநேரத்திற்கும் மேல் தூங்குபவர்கள் 30 சதவீதம் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறைவாக தூங்குபவர்களுக்கு 12 சதவீதம் விரைவில் மரணம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று வார்விக் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி