அந்த வகையில, தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு விஜய்க்கு மிக வித்தியாசமான நடன அசைவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவரும் வழக்கம்போல் ஆடி அசத்திக்கொண்டிருக்கிறாராம். ஆனால் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடிய ஹன்சிகா அவருக்கு இணையாக ஆட முடியாமல் திரும்பத்திரும்ப சொதப்பிக்கொண்டேயிருந்தாராம்.
அதனால் அந்த காட்சி பல ரீடேக் எடுத்ததாம். அதனால் ஹன்சிகாவுக்காக தனது வேகத்தை குறைத்து நடனமாடி அந்த காட்சியை ஓகே செய்திருக்கிறார் விஜய். ஆக ஒருவழியாக விஜய்யுடன் ஆடி முடித்த ஹன்சிகா, இதுவரை நானும் எத்தனையோ ஹீரோக்களுடன் நடனமாடி விட்டேன். ஆனால் இப்படியொரு ஸ்பீடான ஹீரோவைப் பார்த்ததில்லை என்று தனது வியப்பை சொல்லிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி