சென்னை:-நடிகர் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் கடந்த வருடம் பூஜை போட்டு தொடங்கப்பட்டது.பின் கௌதம் மேனன் , நடிகர் அஜித் பட வேலைகளில் பிஸியாகி இந்த படத்தை கிடப்பில் போட்டார்.
தற்போது மீண்டும் தூசி தட்டி, படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று டைட்டில் வைத்து 2ம் கட்ட படப்பிடிப்பை முடித்து, 3வது கட்ட படப்பிடிப்பிற்கு ரெடியாகிவிட்டார். இதில் சிம்பு தன் காதலியை தேடி இந்தியாவின் பல பகுதிகளுக்கு செல்வராம், அப்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகளே கதை என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி