சிட்னி:-உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்பட இந்தியாவின் பல்துறை பிரபலங்களும் சிலைகளும் இங்கு உள்ளன. அவ்வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சச்சின் தெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது.
உள்ளூர் மக்களுடன் இந்தியாவில் இருந்து சிட்னி நகருக்கு சுற்றுலா சென்றவர்களில் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தற்போது சச்சினின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது விளையாட்டு வீரர்கள் அணிந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் இதற்கு முன்னர் எப்போதும் விளையாடியதே இல்லை. இந்த விபரம் தெரிய வந்ததால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி